தனித்திருந்தேன்
துணையாய் வந்தாய்
களைத்திருந்தே்ன்
. உற்சாகம் தந்தாய்
பசித்திருந்தே்ன்
. உணவளித்தாய்
துவண்டிருந்தேன்
. தோள்கொடுத்தாய்
கனவுகள் கண்டேன்
. நினைவுகளாக்கினாய்
காதல்க்கொண்டென்
. மனைவியாய் ஏற்றாய்
மோகம் கொண்டேன்
. தாகம் தீர்த்தாய்
கரு சுமந்தேன்
. எனையே சுமந்தாய்
வலியென்றென்
. உயிர் துடித்தாய்
பெற்றெடுத்தேன்
. பூரித்து நின்றாய்
மகளென்றேன் - இல்லை
. தாய் என்றாய்.
அவள் வரவும்
. என்னை ஏன் மறந்தாய்?
No comments:
Post a Comment