திரையின் பக்கவாட்டிலிருந்தவாரே
நடன அசைவுகளை
ஞாபகபடுத்திகொண்டிருந்த
ஆசிரியையை
கண்ணுற்றபடி
மேடையில் கலக்கிக்கொண்டிருந்தாள்
சாரா குட்டி. எல்.கே.ஜி.
பசி மயக்கத்தினாலோ
மசக்கையின் பொருட்டோ
துவண்டு சரிந்த ஆசிரியையை
கவனித்த சாரா
மேடையிலேயே அழ ஆரம்பித்துவிட்டாள்!
மிஸ் இந்த ஸ்டெப் சொல்லித் தரவேயில்ல என்றவாறே!
No comments:
Post a Comment