சிந்திக்க சொன்ன உன்னை
நிந்திக்க துணிந்தனரே !
போதிக்க பலர் இருந்தும்
சாதிக்க வழிகள் சொன்னாய் !
சாதிக்கு பாடைக்கட்டி
நீதிக்கு கட்சி கண்டாய் ! பெஞ்சாதிக்கு உரிமை தந்து
பெண் சாதிக்கே உயர்வு தந்தாய் ! கடவுளரை மறு த்திடென்றாய் மனிதநேயம் உணர்ந்திடென்றாய்
மது போதை தவிர்த்திடென்றாய் தமிழகமோ தமிழருக்கே என்றாய் ! பகுத்தறிவு பகலவனே !
அறிவுலக ஆசானே !
என்றுணர்வார் மாந்தர் இவர்
நின் கருத்தின் உண்மைதனை !
பார் போற்றும் பண்பாளா !
ஏற்றிடுக என் வணக்கம்.